\
ஜவுளிக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க நடவடிக்கை: அமைச்சர் திட்டவட்டம்

ஜவுளிக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க நடவடிக்கை: அமைச்சர் திட்டவட்டம்

ஜவுளிக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க நடவடிக்கை: அமைச்சர் திட்டவட்டம்
Published on: 

ஜவுளித் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக, விரைவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த இருப்பதாக, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் திருச்சுழி திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஓஎஸ் மணியன், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், நெசவாளர்கள் பிரச்சனைகள் குறித்து தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்படும் என்றார்.

நடப்பு கூட்டத்தொடர் முடிந்த பின்னர் நிதி அமைச்சர் ஜெயக்குமார் நேரடியாக டெல்லி சென்று மத்திய அரசிடம் இந்த விவகாரம் தொடர்பாக உரிய அழுத்தம் கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com