\

வங்கியில் கொள்ளை முயற்சி: ரூ.19 லட்சம் தப்பியது

வங்கியில் கொள்ளை முயற்சி: ரூ.19 லட்சம் தப்பியது
Published on

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்தது.

வங்கியின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், லாக்கரை உடைக்க முயன்றனர். அது முடியாததால், ரூ.19 லட்சம் தப்பியது. இந்த கோபத்தில், வங்கியில் இருந்த பழைய பொருட்களை கொள்ளையர்கள் எரித்துவிட்டு சென்றுள்ளனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக்கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com