குரூப் 4 முறைகேடு : 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி

குரூப் 4 முறைகேடு : 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி

குரூப் 4 முறைகேடு : 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி
Published on

குரூப் 4 முறைகேடு தொடர்பாக 3 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் 99 பேர் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தி டி.என்.பி.எஸ்.சி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து முறைகேடு தொடர்பாக சென்னையில் 12 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், 3 பேரை கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் இடைத்தரகர் என தெரியவந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com