குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Published on

குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான அறிவிக்கையை நவம்பர் 14ம் தேதி வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 13ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குரூப்-4 தேர்விற்கு விண்ணபிப்பதற்கான கால அவகாசம் வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம் செலுத்த வரும் 21ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com