குரூப்2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

குரூப்2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

குரூப்2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
Published on

டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சார்பதிவாளர் உள்ளிட்ட ஆயிரத்து 199 பணியிடங்களுக்காக குரூப்-2 தேர்வு நவம்பர் 11ம் தேதி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் (Grade -2), சார் பதிவாளர்(Grade-2)உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு விதமான பதவிகளில் 1,199 காலியிடங்களை நிரப்பும் வகையில், இந்த குரூப் -2 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேவாணையம் நடத்திய இத்தேர்வினை மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 மையங்களில் 6 லட்சத்து 26,503 பேர் எழுதினர். இவர்களில் ஆண்கள் 3 லட்சத்து 54,136 பேர், பெண்கள் 2 லட்சத்து 72,357 பேர், மேலும் 10 பேர் மூன்றாம் பாலினத்தினர் ஆவர். 

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வு முடிவுகள் http://www.tnpsc.gov.in/results.html என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. முதன்முறையாக தேர்வு எழுதிய ஒரே மாதத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பிரதான தேர்வு வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com