தமிழகத்தில் இன்று குரூப்-1 தேர்வு: இரண்டரை லட்சம் பேர் பங்கேற்பு!

தமிழகத்தில் இன்று குரூப்-1 தேர்வு: இரண்டரை லட்சம் பேர் பங்கேற்பு!

தமிழகத்தில் இன்று குரூப்-1 தேர்வு: இரண்டரை லட்சம் பேர் பங்கேற்பு!
Published on

தமிழகத்தில் காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.

உதவி ஆட்சியர், டி.எஸ்.பி., தீயணைப்பு அலுவலர், வணிகவரித்துறை உதவி ஆணையர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 தேர்வு இன்று நடைபெறுகிறது. 66 பணியிடங்களுக்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில், 9.15 மணிக்கே மையத்துக்கு தேர்வர்கள் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க தற்போது புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

OMR தாளில் விடையைக் குறிப்பதற்கு, கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும், தெரியாத கேள்விகளுக்கு "E" என்ற கட்டத்தை Shade செய்ய வேண்டும், விடையளித்த மொத்த கேள்விகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும், கைரேகை கட்டாயம் போன்ற நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com