நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டுமானப் பணி: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டுமானப் பணி: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டுமானப் பணி: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
Published on

முக்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நிலத்தடி நீர்செறிவூட்டும் கட்டுமானப்பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்தா ஆற்றின் குறுக்கே ஒருகோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிலத்தடி நீர்செறிவூட்டும் கட்டுமான பணி நடைபெற உள்ளது இதன் மூலம் 124.375 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அதே போல் வேலூர் மாவட்டம் மலட்டாற்றின் குறுக்கே 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலத்தடி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இதற்கும் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்த நிலத்தடி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி முடிந்து பயன்பாட்டுக்கு வந்தால் 377 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com