சபரிமலை கோயில் அன்னதானத்திற்கு ஈரோட்டிலிருந்து அனுப்பப்பட்ட மளிகைப்பொருட்கள், காய்கறிகள்

சபரிமலை கோயில் அன்னதானத்திற்கு ஈரோட்டிலிருந்து அனுப்பப்பட்ட மளிகைப்பொருட்கள், காய்கறிகள்
சபரிமலை கோயில் அன்னதானத்திற்கு ஈரோட்டிலிருந்து அனுப்பப்பட்ட மளிகைப்பொருட்கள், காய்கறிகள்

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து சபரிமலை பக்தர்கள் அன்னதானத்திற்கு தேவைப்படும் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40 டன் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் 6 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

சபரிமலை சன்னிதானத்தில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிவரும் தேவஸ்தான போர்டு நிர்வாகத்திடம் அனுமதிபெற்று அன்னதானத்திற்கு தேவைப்படும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு அன்னதானத்திற்கு தேவையான 50 மூட்டை அரிசி, 1000 கிலோ ரவை, 500 கிலோ கொண்டைக்கடலை, 600 கிலோ துவரம் பருப்பு, 350 கிலோ பனங்கருப்பட்டி, உளுந்தம் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் தக்காளி, கேரட், பீன்ஸ்,உருளைக்கிழங்கு, பூசணி, கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் என மொத்தம் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 டன் மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் ஆறு லாரிகளில் ஏற்றப்பட்டு சபரிமலை சன்னிதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அன்னதான பணியில் இணைந்து 9 ஆண்டுகளாக மளிகைப் பொருட்கள், காய்கறி வகைகளை அனுப்பி வருவதாகவும், சபரிமலை தேவஸ்தான போர்டு நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெற்று மளிகைப் பொருட்கள், காய்கறிகள் என மொத்தம் 40 டன் பொருட்களை தற்போது சபரிமலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்த ஆண்டு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், நிலக்கல் தேவசம் போர்டு,மணிகண்ட சேவா சமிதி ஆகிய இடங்களுக்கு கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com