மகன்கள் - பராமரித்தவரிடையே முற்றிய உரிமை மோதல்; உயிரிழந்த பின்னும் முதியவரை தொடரும் துயரம்

மகன்கள் - பராமரித்தவரிடையே முற்றிய உரிமை மோதல்; உயிரிழந்த பின்னும் முதியவரை தொடரும் துயரம்

மகன்கள் - பராமரித்தவரிடையே முற்றிய உரிமை மோதல்; உயிரிழந்த பின்னும் முதியவரை தொடரும் துயரம்

திருச்சியில் மகன்கள் மற்றும் பராமரித்தவர் இடையேயான இருதரப்பு பிரச்னையில் உடற்கூறாய்வுக்குப் பின் மருத்துவமனையிலேயே காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது முதியவரொருவரின் சடலம். இந்நிலையில் இருதரப்பினரும் அடுத்தகட்டமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம், திருநெல்லிபட்டி கிராமத்தில் வசித்து வந்தவர், ஓய்வு பெற்ற அஞ்சல் துறை பணியாளர் தனஞ்ஜெயன் (78). இவர் கடந்த திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். முதியவர் தனஞ்செயன் மரணத்தில் இருவர் மீது சந்தேகம் இருப்பதாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த பொன்னம்பட்டியில் வசித்து வரும் அவரது மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து தனஞ்ஜெயனின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின் செவ்வாய்க்கிழமை உடற்கூறாய்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், திருநெல்லிபட்டியில் வசித்து வந்த பாலாஜி என்பவர், தனக்கு தனஞ்ஜெயன் உயில் ஒன்று எழுதி கொடுத்திருப்பதாகவும், அந்த உயிலில் அவருக்கு உரிமையான சொத்துக்கள் மற்றும் அவருடைய ஈம காரியங்களை செய்யும் உரிமை ஆகியவற்றை தனக்கு எழுதிவைத்திருப்பதாகவும் ஆவணப்படுத்தி புகார் தெரிவித்தார். மேலும் கடந்த 30 ஆண்டுகளாக தனஞ்ஜெயன் பாலாஜியின் பராமரிப்பில்தான் இருந்து வந்தார் என்பதையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த உயிலின் பேரில் தனஞ்ஜெயனின் உடலை தன்னிடம் வழங்குமாறு பாலாஜி வலியுறுத்தியதால், பாலாஜிக்கும் தனஞ்ஜெயனின் மகன்களுக்கும் சர்ச்சை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருங்காபுரி வருவாய் வட்டாட்சியர் செல்வம், அய்யம்பட்டி காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை.

இதனால் தனஞ்ஜெயன் மகன்களுக்கும் பாலாஜிக்கும் இடையே திருச்சி கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதன முடிவெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அப்போதும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. மேலும் இருதரப்பினருமே நீதிமன்றத்தை அணுகுவதாக தெரிவித்ததால், `நீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகு உடல் ஒப்படைக்கப்படும். அதுவரை தனஞ்ஜெயனின் சடலம், மணப்பாறை அரசு மருத்துவமனை பிணவறையில் பதப்படுத்தி பாதுகாப்பு முறையில் வைக்கப்படும்’ என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதனிடையே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு தரப்பும் உயிரிழந்த உடலை இரண்டு தரப்பும் கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதற்கிடையே முதியவரின் உடல் மருத்துவமனையில் பதப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com