தமிழ்நாடு
திருவண்ணாமலையில் பசுமை விழிப்புணர்வு மராத்தான்.. 5,000 மாணவர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலையில் பசுமை விழிப்புணர்வு மராத்தான்.. 5,000 மாணவர்கள் பங்கேற்பு
பசுமையை வலியுறுத்தி திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட மாரத்தான் நடைபெற்றது.
சுமார் 11 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் 5,000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு காரணமாக திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 900 அடிக்கு கீழ் இறங்கியுள்ளது. அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அண்ணாமலையார் கோவில் முன்பாக தொடங்கப்பட்டு மலை சுற்றுப்பாதையில் மாரத்தான் நடைபெற்றது.