“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம்  70 வயது முதியவர் மனு

“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு

“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு
Published on

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை தூக்கிவந்து திருமணம் செய்‌யப்போவதாக 70 வயது முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள விரதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் மலைச்சாமி. இவர் பி.வி‌.சிந்துவின் புகைப்படத்துடன் கூடிய மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலு‌லகத்துக்கு வந்தார். அப்போது, தமக்கு 16 வயதே ஆவதாகவும், நாட்டில் உள்ள தீமைகளை அழிப்பதற்காக முதியவர் அவதாரம் எடுத்துள்ளதாகவும் கூறினார். 

மேலும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை தூக்கிவந்து திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவை பார்த்த மாவட்ட ஆட்சியர் செய்வதறியாது திகைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com