சென்னை தனியார் பள்ளி ஒன்றில் வித்யாசமாக தாத்தா பாட்டி தினம் கொண்டாடப்பட்டது.
சென்னை அடுத்த மாங்காடு பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற தாத்தா பாட்டியர் தினத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை வடிவுக்கரசி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவியர் குழந்தைகள் நடன நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன.
மேலும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் சிறப்பு போட்டிகள் வைக்கப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு வடிவுக்கரசி தங்க நாணயங்கள் வழங்கினார். பேரப்பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டி கதை சொல்லி வளர்க்கும் கலாச்சாரம் மறைந்து கொண்டிருக்கும் காலத்தில் இந்த முயற்சி குழந்தைகளை உற்சாகம் கொள்ள செய்தது.