\
அரசு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முயற்சியா?: தமிழக அரசு மீது ஸ்டாலின் சந்தேகம்

அரசு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முயற்சியா?: தமிழக அரசு மீது ஸ்டாலின் சந்தேகம்

அரசு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முயற்சியா?: தமிழக அரசு மீது ஸ்டாலின் சந்தேகம்
Published on

காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பாமல், நிரந்தர அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு
உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை உடனே உரிய
காலத்திற்குள் அமல்படுத்துவதை அலுவலக கமிட்டி அமைத்து வேண்டுமென்றே தமிழக அரசு காலதாமதம் செய்து வந்ததாக
கூறியுள்ளார். அக்டோபர் 13ஆம் தேதிக்குள் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த
வேண்டும் என்று காலநிர்ணயம் செய்து அரசு ஊழியர்கள் போராட்டத்தை உயர் நீதிமன்றம் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் அவர்
தெரிவித்துள்ளார். 

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு உயர்நீதிமன்ற தீர்ப்பே காரணம்
என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த
வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கை பற்றி பரிசீலிக்க நியமிக்கப்பட்ட கமிட்டி இன்னும் தன் அறிக்கையை
கொடுக்காமல் தாமதிப்பது வேதனைக்குரியது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். பணியாளர் சீரமைப்புக்குழு ஒன்று அமைக்கப்படுவதாக
அரசு கூறியுள்ளது, நிரந்தர அரசு ஊழியர்களின் எண்ணிக்கையையும் திட்டமிட்டு குறைக்கும் நோக்கம் இருக்கிறதோ என்ற சந்தேகத்தை
எழுப்புவதாகவும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com