பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வினாத்தாள் வெளியானதாக வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வினாத்தாள் வெளியானதாக வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வினாத்தாள் வெளியானதாக வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வினாத்தாள் வெளியானதாக வதந்தி பரப்பியர் மீது எடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் குற்றவியல் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு கம்ப்யூட்டர் முறையில் நடைபெற்ற தேர்வின் போது நாமக்கல் ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய தேர்வர் பெண் தேர்வர் கணக்கிடுவதற்காக அளிக்கப்பட்ட வெள்ளைத்தாளை (rough sheet) பயன்படுத்தி கம்ப்யூட்டர் திரையில் தோன்றிய வினாக்களை பதிவு செய்துள்ளார். மேலும் தேர்விற்கான விதிகளை மீறி தேர்வு முடிந்தப் பின்னர் வெளியில் வந்த அவர், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிர விசாரணை நடத்தியதில், தேர்வு நடக்கும் போது எந்தவிதமான வினாத்தாள் லீக் ஆகவில்லை என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் தேர்வின் போது விதிகளை மீறி செயல்பட்டுள்ளார் என்பதையும் ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டறிந்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின் போது தேர்வுக்கான விதிமுறைகளை வெளியிட்டிருந்தது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஹால்டிக்கெட்டிலும் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தேர்வர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், அவரை வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதுவதற்கு தடைவிதிக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் சமூகவலைதளங்களில் தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது அவதூறு நடவடிக்கை எடுக்கக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.மேலும் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் தேர்வர்களுக்கு விடைகளை கண்டறிவதற்கு அளிக்கப்படும் வெள்ளைத்தாளும் தேர்வு மையத்தின் அதிகாரிகளால் பெற்றுக் கொள்ளப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com