பொள்ளாச்சி தனியார் சொகுசு விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு !

பொள்ளாச்சி தனியார் சொகுசு விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு !
பொள்ளாச்சி தனியார் சொகுசு விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு !

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் சொகுசு விடுதிகளில் வருவாய் மற்றும் காவல்துறையினர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். 

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மாதம் சேத்துமடை பகுதியில் தனியார் தென்னந்தோப்பிற்கு நடுவே அனுமதியின்றி செயல்பட்டு வந்த ரிசார்ட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கேரள இளைஞர்கள் பல்வேறு தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி அட்டகாசம் செய்தனர். இது குறித்த புகார் அளிக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் 160க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் தங்கும் விடுதிக்கு சீல் வைத்து, உரிமையாளர்களை கைது செய்தனர். 

இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை,சேத்துமடை, சர்க்கார்பதி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமையிலான குழு திடீர் ஆய்வு செய்தது. வருவாய் துறை, காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அரசு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விடுதிக்கு வரும் பயணிகள் அடையாள அட்டைகள் மற்றும் அவர்களது முகவரிகள் முறையாக சேகரிக்க படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும், துறை ரீதியான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com