\
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
Published on

நாடாளுமன்ற கூட்டத் தொடரை இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றபோது, தேவைப்பட்டால், கூட்டத் தொடரை இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு நீடிக்கலாம் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளிடமும், பாஜக தலைவர்கள் பேசி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய மசோதாக்கள் பலவற்றிற்கு ஒப்புதல் அளிக்க வகை செய்யும் வகையில் இந்த நீட்டிப்பு செய்யப்படுவதாக தெரிகிறது.

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜூன் 17ம் தேதி தொடங்கி, இந்த மாதம் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com