\
அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்

அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்

அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
Published on

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் நடத்தி வந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் விஜய பாஸ்கரின் கோரிக்கையை ஏற்று வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com