\
நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட ஓட்டுநர்கள்: ஸ்தம்பித்த போக்குவரத்து!

நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட ஓட்டுநர்கள்: ஸ்தம்பித்த போக்குவரத்து!

நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட ஓட்டுநர்கள்: ஸ்தம்பித்த போக்குவரத்து!
Published on

சோழிங்கநல்லூரில் அரசுப் பேருந்து ஊழியரும், கார் ஓட்டுநரும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில், ஊழியர்களை அழைத்துச் செல்லும் கார் ஓட்டுநராக பணிபுரிபவர் கணேஷ். இவர் இன்று ஊழியர்களுடன் காரில் வந்த போது, சாலையில் வந்த அரசுப் பேருந்து காரில் உரசியதாக தெரிகிறது. இதனால் கார் ஓட்டுநருக்கும், அரசுப் பேருந்து ஓட்டுநர் சந்திரசேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாற, இருவரும் நடுரோட்டிலேயே கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். இருவரும் ஓட்டி வந்த வாகனங்களை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு சண்டை போட்டதால், அப்பகுதியில் சற்று நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர் இருவரும் செம்மஞ்சேரி காவல்நிலையத்திற்கு சென்று ஒருவர் மீது மற்றொருவர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com