தமிழ்நாடு
கைலாய யாத்திரை சென்ற தமிழர்கள் நேபாளத்தில் தவிப்பு
கைலாய யாத்திரை சென்ற தமிழர்கள் நேபாளத்தில் தவிப்பு
தமிழகத்திலிருந்து கைலாய யாத்திரை சென்ற 19 பேர் மோசமான வானிலை காரணமாக ஊர் திரும்ப இயலாமல் தத்தளித்து வருகின்றனர்.
நேபாளத்தின் சிமிகோட் என்ற இடத்தில் 19 பேரும் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தங்கியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். உள்ளூர் விமான நிறுவனத்தினர் நடத்திய வேலைநிறுத்தத்தால் குறிப்பிட்ட நாளில் ஊருக்கு புறப்பட முடியவில்லை என்றும் ஆனால் மறுநாளில் இருந்து மழை பெய்யத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மிகுந்த சிரமங்களுக்கு இடையில் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தங்களை மத்திய அரசும் தமிழக அரசும் பத்திரமாக மீட்டு ஊருக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பாதிக்கப்பட்டோரை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.