தமிழ்நாடு
ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்க அரசாணை
ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்க அரசாணை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாகக் கடைப்பிடிப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அது தொடர்பாக சமூக நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், மனிதச் சங்கிலி, பேரணி, கருத்தரங்கங்கள், வீதி நாடகங்கள் நடத்தப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்கப்படும் என்றும் அரசாணையின் தெரிவிக்கப்பட்டுள்ளது.