”தமிழர்களின் வரலாறு, பாரம்பரியம், கலாசாரத்தில் ஆளுநர் மூக்கை நுழைக்கிறார்”- கனிமொழி எம்.பி

”தமிழர்களின் வரலாறு, பாரம்பரியம், கலாசாரத்தில் ஆளுநர் மூக்கை நுழைக்கிறார்”- கனிமொழி எம்.பி

”தமிழர்களின் வரலாறு, பாரம்பரியம், கலாசாரத்தில் ஆளுநர் மூக்கை நுழைக்கிறார்”- கனிமொழி எம்.பி
Published on

ஆளுநர் கே.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என கூறுவது தமிழர்களின் வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் மூக்கை நுழைக்க துவங்கியுள்ளனர் என எம்பி. கனிமொழி பேசினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பாக மாபெரும் சமத்துவ பொங்கல் விழா திரேஸ்புரம் பாக்கியநாதன் விளையில் நடைபெற்றது. இந்த விழாவை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி. தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர்...

தமிழக ஆளுநர், தமிழ்நாட்டை தமிழகம் என்று கூற வேண்டியது தானே என கூறுவது அவர்கள் ஒவ்வொன்றையும் தமிழர்களின் அடையாளங்களை கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை, பண்பாட்டை வரலாறு ஆகியவற்றில் மூக்கை நுழைக்க துவங்கி இருக்கிறார். இந்த காலகட்டத்தில் நாம் பெருமையாக தமிழர்களாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக கொண்டாடக் கூடிய விழா பொங்கல் விழா.

இந்த காலகட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் சூளுரை ஏற்க வேண்டியது உள்ளது. நாம் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டை தமிழ்நாட்டின் பெருமைகளை தமிழர்களின் அடையாளங்களை பண்பாடுகளை திறமைகளை கலாச்சாரத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்க வேண்டும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கட்சி நிர்வாகிகள் எஸ்.ஆர் ஆனந்த சேகரன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com