தமிழக அரசியல் சூழல் மாறியுள்ள நிலையில், கோவையில் இருந்து தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று மாலை சென்னை வர இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், திடீரென விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.