\
ஆயுத பூஜை, விஜயதசமி: ஆளுநர், முதல்வர் உட்பட தலைவர்கள் வாழ்த்து

ஆயுத பூஜை, விஜயதசமி: ஆளுநர், முதல்வர் உட்பட தலைவர்கள் வாழ்த்து

ஆயுத பூஜை, விஜயதசமி: ஆளுநர், முதல்வர் உட்பட தலைவர்கள் வாழ்த்து
Published on

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி ப‌ழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் வித்யாசாகர்‌ ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்த விழாக்கள் ஞானத்தின் விளக்கை ஏற்றி, படிப்பறிவை பரப்பி, திறன் வளர்ச்சியை ஊக்குவித்து, முழுமையான வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் செழிப்பை பெருக்கட்டும் எ‌னக் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ஆயுத பூஜை ‌மற்றும் விஜயதச‌மி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைத்து ‌நலங்களும் வளங்களும்‌ பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆயுத பூஜை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதேபோல, அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் ஆயுத பூஜையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com