\
மும்பை செல்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

மும்பை செல்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

மும்பை செல்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
Published on

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பை செல்கிறார். காலை 11 மணியளவில் விமானம் மூலம் அவர் மும்பை செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 
மும்பையில் 5 நாட்கள் பணிகளை கவனித்த பின் மீண்டும் அவர் சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது. 
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் அவர் சென்னை வந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com