”ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவதா?” - ஆளுநர் தமிழிசை கண்டனம்

ஆன்மிகமும் தமிழும் பிரிக்க முடியாதது. ஆன்மிகத்தோடு கூடிய தமிழை இன்னும் தமிழகத்தில் பரப்பப்பட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்PT desk

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்...

governor tamilisai
governor tamilisaipt desk

”ஆன்மிகமும் தமிழும் பிரிக்க முடியாதது. ஆன்மிகத்தோடு கூடிய தமிழ் இன்னும் தமிழகத்தில் பரப்பப்பட வேண்டும். தமிழுக்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தம் இல்லை என சிலர் கொள்கை ரீதியாக பேசி வருகிறார்கள். அது தவறு என மக்கள் தங்கள் நடவடிக்கையில் நிரூபித்துக் கொண்டு வருகிறார்கள். தமிழோடு சேர்ந்து ஆன்மிகமும் தழைக்கும். தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என்ற எண்ணம் இன்னும் அதிகமாக விதைக்கப்பட வேண்டும்.

ஆளுநர் அவரது கருத்தை சொல்கிறார். கருப்புக் கொடி காண்பிப்பது தவறு. எல்லோருக்கும் தமிழகத்தில் சென்று வருவதற்கு உரிமை உள்ளது. அவரவர் கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது. ஆன்மிக நிகழ்ச்சிக்கு அழைப்பை ஏற்று வரும்போது இது போன்ற போராட்டங்களை தவிர்ப்பது நல்லது. புதுச்சேரி ஆளுநர் வெளியேற வேண்டும் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

kovil
kovilpt desk

முன்னதாக, சீர்காழியில் சட்டநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக் கொடி காண்பித்து கண்டனம் முழக்கம் எழுப்பினர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com