உதகை டூ குன்னூர்: மலை ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!

நீலகிரி மலை ரயிலில் உதகை முதல் குன்னூர் வரை குடும்பத்தாருடன் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
governor RN.Ravi
governor RN.Ravipt desk

நீலகிரி மாவட்டம் உதகைக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்காக அவர் கடந்த 3 ஆம் தேதி மாலை உதகை சென்றிருந்தார். அங்கு உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த அவர், கடந்த ஐந்தாம் தேதி துணை வேந்தர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

governor RN.Ravi
governor RN.Ravipt desk

இதைத் தொடர்ந்து இன்று நீலகிரி மலை ரயிலில் உதகையில் இருந்து குன்னூர் வரை பயணம் செய்து இயற்கை காட்சிகளை தனது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். ஆளுநர் வருகையால் உதகை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

உதகையில் தங்கி இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 9 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளுநர் பயணித்த மலை ரயிலில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.பிரபாகர் அவருடன் பாதுகாப்புக்கு சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com