seeman and rn ravi
seeman and rn ravifile image

ஆளுநர், சட்டமன்றத்தை விட்டு வெளியேறியதை விட தமிழகத்தை விட்டே வெளியேறலாம் - சீமான்

சட்டமன்றத்தை விட்டு வெளியேறியதை விட தமிழகத்தை விட்டே ஆளுநர் வெளியேறலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்..
Published on

செய்தியாளர்: மோகன்ராஜ்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி ஆளுநர் வெளியேறியது மரபை மீறிய செயல். சட்டமன்றத்தை விட்டு வெளியேறியதை விட தமிழகத்தை விட்டே ஆளுநர் வெளியேறலாம்.

பேரவையில் சபாநாயகர் அப்பாவு - ஆளுநர் ஆர்.என்.ரவி
பேரவையில் சபாநாயகர் அப்பாவு - ஆளுநர் ஆர்.என்.ரவிபுதிய தலைமுறை

திமுகவிற்கு கருப்பு மேல் என்ன வெறுப்பு. நீட் தேர்வின் போது செய்த நடவடிக்கைகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. கருப்பு ஆகாது என்றால் திமுக கொடியிலிருந்து கருப்பு நிறத்தை எடுத்து விடுவீர்களா என்று கேள்விகளை எழுப்பினார்.

seeman and rn ravi
சாரை சாரையாக சபரிமலையில் குவியும் பக்தர்கள்: பாதுகாப்பு விரைவு சுப தரிசனம் - தேவஸ்வம் போர்டு உறுதி

அண்ணா பல்கலைக்கழக விவகாரம், கள்ளக்குறிச்சி சம்பவம் ஆகியவற்றை அரசு மூடி மறைக்க பார்க்கிறது. ஈரோடு இடைத்தேர்தலில் யார் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் நாம் தமிழர் கட்சி கட்டாயம் போட்டியிடும் என்று சீமான் கூறினார்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com