
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். இதில் திண்டுக்கல் மாணவி நந்தினி மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா உள்ளிட்ட 11 மாணவர்கள் பங்கேற்றனர். அதேபோல் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, உயர்கல்வி படிப்புகள் தொடர்பாக ஆலோசனை வழங்கி உரையாடினார்.
உடன் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களிடம் பேசும் போது, ''மாணவர்களின் இலக்கு முதன்மையாக இருக்க வேண்டும். உயர்கல்வியில் இலக்கை அடைய வேண்டும் என்பதில் மாணவர்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். மேலும் +2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்னும் பெரும் பயணம் செல்ல வேண்டியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும். நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவம் படிக்க முடியும். அதற்கான கட்டணம் குறைவு தான். தனியார் கல்லூரியில் கட்டணம் அதிகமாக இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொலைபேசி பயன்படுத்துவதில் மாணவர்களுக்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும். படிப்பு தொடர்பானதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
சட்டம் படிக்க விருப்பமாக இருப்பவர்கள் சிறப்பான சட்ட கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாரக நினைக்கும் மாணவர்கள் மற்ற துறையில் வெற்றி பெறும் அளவுக்கு சேர்ந்தே நமது தேர்வு இருக்க வேண்டும்.
மாணவர்கள் 5 ஆண்டுகளில் கடின உழைப்பில் மாணவர்களுக்கு உதவ தாம் தயாராக இருக்கிறேன்” என ஆளுநர் தெரிவித்தார். பின்னர் மாணவர்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டு நினைவு பரிசு கொடுத்து வாழ்த்தினார்.