ஆளுநர் ஆர்என்.ரவி
ஆளுநர் ஆர்என்.ரவிfile

ஆரியர்கள் வந்தேறிகள் என்பதை திணிக்க முயற்சித்தார் ஈவேரா - ஆளுநர் ஆர்என்.ரவி குற்றச்சாட்டு

ஆரியர்களை வந்தேறிகள் என்று சொன்னவர் ஈவேரா. அந்தக் கருத்தை தமிழகத்தில் அவர் திணிக்க முயற்சி செய்தார் என்று ஆளுநர் ஆர்என்.ரவி பேசினார்.
Published on

செய்தியாளர்: ரமேஷ்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள னுபு வைஷ்ணவ் கல்லூரியில், இந்தஸ் நாகரிகம் சார்ந்த பண்பாடு, மக்கள் மற்றும் தொல்பொருளியல் மீதான பார்வைகள் என்ற தலைப்பில் தேசிய மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்.ரவி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில்...

தந்தை பெரியார்
தந்தை பெரியார் கோப்புப்படம்

ஆரியர் என்று இனப் பாகுபாடு காட்டியவர் மேக்ஸ் மில்லர்:

உலகில் மூன்று இனங்களாக பாகுபாடுகள் உள்ளன. முதல் வெள்ளை நிறம். இரண்டாவது மஞ்சள். மூன்றாவது கருப்பரினம். இதில் மிகவும் உயர்ந்தவர்களாக வெள்ளை இனத்தவரை கருதுகிறார்கள். 1850-களில் நிறத்தின் அடிப்படையிலான பாகுபாடு இருந்தது. வின்ஸ்டன் சர்ச்சில் மற்ற இனத்தினரை நாய்கள் போல் கருதினார். ஆரியர் என்று இனப் பாகுபாடு காட்டியவர் மேக்ஸ் மில்லர்...

ஆளுநர் ஆர்என்.ரவி
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டம்!

தமிழும் சமஸ்கிருதமும் இந்தியாவில் மிகவும் பழமையான மற்றும் தொன்மையான சிறந்த மொழிகள்:

ஆரியர் என்ற ஒன்று இல்லை என தமிழ் சங்க கால நூல்கள் சொல்கின்றன. ஆரியர்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் சில நூல்களை எழுதுகிறார்கள். நச்சு விதையை பரப்புகிறார்கள். இந்தியாவில் மேற்கத்திய நாகரிகங்களை திணிக்க முயற்சித்தனர். தமிழும் சமஸ்கிருதமும் இந்தியாவில் மிகவும் பழமையான மற்றும் தொன்மையான சிறந்த மொழிகள். ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வருகை தந்த போது இருக்கின்ற இந்தியாவில் நாகரிகங்களில் சிறந்த நாகரிகங்களாக இருந்தன.

Governor RN.Ravi
Governor RN.Ravifile

ஆரியர்களை வந்தேறிகள் என்று சொன்னவர் ஈவேரா:

மகாபாரதத்தில் சரஸ்வதி நதி குறித்து பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ரிக் வேதத்தில் அனைவரும் சமம் என்றும், அனைவரும் ஒரே குடும்பம் என்றும் இருக்கிறது. ஆரியர்களை வந்தேறிகள் என்று சொன்னவர் ஈவே.ராமசாமி, அதை இங்கே திணிக்க முயற்சி செய்தார். மொழிவாரியாக நாம் பிரிக்கப்பட்டுள்ளோம். இது ஒற்றுமைக்கு எதிராக உள்ளது. இடதுசாரிகள் இதை ஏற்றுக் கொள்வதில்லை காரல் மார்க்ஸ் சொல்வதை தான் அவர்கள் கேட்கிறார்கள்.

ஆளுநர் ஆர்என்.ரவி
தவெக நிர்வாகிகள் அதிரடி கைது.. தலைமையிடமிருந்து வந்த அறிக்கை.. ஆனந்தின் அடுத்தடுத்த பதிவு!

சிந்து - சரஸ்வதி நதி நாகரிகம்:

ஆரியர்கள் என்பவர்கள் ஆசிரியர்களை போன்றவர்கள். கற்பிப்பவர்கள். தலைசிறந்தவர்கள். வேதத்தில் அனைவரும் சமம் என்று இருக்கிறது. சிந்து - சரஸ்வதி நதி நாகரிகம், அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. பாரதி தற்போது எதை சொன்னாலும் உலகமே திரும்பிப் பார்க்கிறது. சிந்து நாகரிகம் என்று மட்டும் சொல்லாமல் சரஸ்வதியை சேர்ந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும் என்று ஆளுநர் ஆர்என்.ரவி பேசினார்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com