ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவிpt web

“கடவுள் சரஸ்வதியை வணங்கிவிட்டு படித்தால் அறிவு பெருகும்” - மாணவர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

மாணவ-மாணவிகள் கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வணங்கி வந்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
Published on

கொடைக்கானல் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு சென்ற தமிழக ஆளுநர் ரவி, மாணவ- மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது “எத்தனை பேர் கல்விக் கடவுளான சரஸ்வதியின் படத்தை படிக்கும் மேஜையில் வைத்து உள்ளீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

அதற்கு மாணவர்கள் பதிலளித்த நிலையில், “இனிவரும் காலங்களில் படிக்கும் மேஜையில் கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைத்து வணங்கி விட்டு, படித்தால் நிச்சயம் அறிவு பெருகும்” என அறிவுறுத்தினார்.

மேலும் சரஸ்வதி வந்தனம் பாடல், பள்ளியில் பாட பழக்கப்படுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com