\
3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி

3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி

3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி
Published on: 

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி 3 நாள் பயணமாக பிப்ரவரி 7ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளார்.

பிப்ரவரி 7ஆம் தேதி மதியம் 1.20 மணியளவில் ஆளுநர் ஆர்.என் ரவி டெல்ல செல்லவிருக்கிறார். பிறகு 9ஆம் தேதி தமிழகத்திற்கு திரும்பவிருக்கிறார். நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ள நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது குறித்து சட்டமன்ற அனைத்துக்கட்சிகளுடன் நாளை தமிழக அரசு ஆலோசனை நடத்தவிருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் ஆளுநரை திரும்பப்பெற வேன்டுமென வலியுறுத்தி வருவதோடு சில கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com