தமிழ்நாடு
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து
பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் தேநீர் விருந்து அளித்தார் ஆளுநர்.
ராஜ்பவனில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து, 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
பதவியேற்பு விழாவையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் தேநீர் விருந்து அளித்தார் ஆளுநர். மு.க.ஸ்டாலின், துரைமுருகனுடன் ஓ.பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் அருகருகே அமர்ந்து தேநீர் அருந்தினர்.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதை அடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்; இனிப்பு வழங்கியும் திமுகவினர் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.