\
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு
Published on

அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, தம்மை சந்திக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவரது தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து தங்களை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தம்மை மாலை 5.30 மணிக்கு சந்திக்க வருமாறு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி உள்பட 12 பேர் ஆளுநரை சந்திக்க செல்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com