ஆளுநர் அழைப்பு விடுத்தால் அடுத்த நிமிடமே அதிமுக ஆட்சி அமைக்கப்படும் என தமிழக அமைச்சர் ஒ.எஸ்.மணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று 2 வது நாளாக கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதிக்கு எம்எல்ஏக்களை சந்திக்க சென்றார். கூவத்தூரில் அமைச்சர்
ஒ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஓ.பன்னீர் செல்வம் 6 அல்லது 7எம்எல்ஏக்களை சேர்த்துக் கொண்டு அதிமுக ஆட்சியை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு சசிகலா செயல்பட்டு வருவதாக கூறிய ஒ.எஸ்.மணியன், கவர்னர் அழைப்பு விடுத்தால் அடுத்த நிமிடமே ஆட்சியை அமைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.