தமிழக பிரச்னைகள் குறித்து பிரதமர், அமைச்சர்களுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை

தமிழக பிரச்னைகள் குறித்து பிரதமர், அமைச்சர்களுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை
தமிழக பிரச்னைகள் குறித்து பிரதமர், அமைச்சர்களுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை

டெல்லியில் பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தின் முக்கிய விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ததாக தெரிவித்துள்ளார். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம், சட்டம் ஒழுங்கு நிலைமை, கொரோனா சூழல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது குறித்து பிரதமருடன் ஆளுநர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பன்வாரிலால் புரோகித் சந்தித்துப் பேசினார்.

டெல்லி பயணத்தின் ஒரு பகுதியாக துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரையும் சந்தித்து ஆளுநர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஆளுநர் டெல்லி பயண சந்திப்புகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை தொடர்பான பிரச்னையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்ணாப் பல்கலைக் கழக விவகாரத்திலும் சில பிரச்னைகள் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் ஆளுநர் டெல்லி சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com