தமிழ்நாடு
ஊரடங்கு குறித்த அறிவிப்பை அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும்.- மு.க.ஸ்டாலின்
ஊரடங்கு குறித்த அறிவிப்பை அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும்.- மு.க.ஸ்டாலின்
ஊரடங்கு குறித்த அடுத்தக்கட்ட அறிவிப்பை மத்திய - மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கொரோனா நோய்த் தொற்றை பரவ விடாமல் தடுத்து நிறுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட இரண்டாவது ஊரடங்கு காலம், மே 3-ம் தேதியோடு
முடிவடைகிற நிலையில்,மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா அல்லது படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது.
ஆகவே ஊரடங்கு குறித்த எந்த முடிவாக இருந்தாலும் மத்திய மாநில அரசுகள் தாமதிக்காமல் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் மக்களின் கடைசி நேர பதற்றம் தவிர்க்கப்படும் என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.