தமிழ்நாடு
கோபியை தனி மாவட்டமாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்யும்: அமைச்சர் முத்துசாமி
கோபியை தனி மாவட்டமாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்யும்: அமைச்சர் முத்துசாமி
ஈரோடு மாவட்டத்தை இரண்டாக பிரித்து கோபியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டமாக உருவாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்யும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார்.
ஈரோட்டில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகு பேசிய அமைச்சர் முத்துச்சாமி, “ ஈரோடு மாவட்டத்தை கோபியை தலைமையிடமாக கொண்டு இரண்டாக பிரிப்பது குறித்து அரசு சார்பில் நிச்சயமாக ஆய்வு மேற்கொள்ளப்படும். உயர் மின்கோபுரங்கள் பிரச்சினைகளில் தீர்வு காண கால அவகாசம் தேவைப்படுகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்பதில் திமுக தெளிவாக இருக்கிறது.
ஓமைக்ரான் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என மக்களே சொல்கிறார்கள் அதுபற்றி முதல்வரே முடிவெடுப்பார்” என தெரிவித்தார்