தமிழ்நாடு
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பயணிகள் அவதி
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பயணிகள் அவதி
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பெரும்பாலான இடங்களில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
மயிலாடுதுறை, சீர்காழி, பொறையார் பணிமனையில் உள்ள 134 பேருந்துகளில் 21 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆனால் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படவில்லை. கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படாததால் கூலித் தொழிலாளர்கள் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.