\
போராட்டத்திலுள்ள மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை

போராட்டத்திலுள்ள மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை

போராட்டத்திலுள்ள மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை
Published on

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

தகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டள்ளது.

இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மருத்துவர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர், சுகாதார இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com