தமிழ்நாடு
தமிழக அரசு விவசாயிகளுக்குத் துணை நிற்கும் : அமைச்சர் ஜெயக்குமார்
தமிழக அரசு விவசாயிகளுக்குத் துணை நிற்கும் : அமைச்சர் ஜெயக்குமார்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசு விவசாயிகளுக்குத் துணை நிற்கும் எனக் கூறினார்.
வறட்சி நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 18-ஆவது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக விவசாயிகளை அமைச்சர் டி.ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது பேசியவர், விவசாயிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என கூறினார். மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பயிர்காப்பீட்டை பொறுத்த வரையில் தமிழக அரசின் பங்கு செலுத்தப்பட்டுவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.