ஊட்டி மலை ரயிலை முழுமையாக அரசே இயக்க வேண்டும் : எஸ்டிபிஐ கட்சியனர் ரயில் மறியல்

ஊட்டி மலை ரயிலை முழுமையாக அரசே இயக்க வேண்டும் : எஸ்டிபிஐ கட்சியனர் ரயில் மறியல்
ஊட்டி மலை ரயிலை முழுமையாக அரசே இயக்க வேண்டும் : எஸ்டிபிஐ கட்சியனர் ரயில் மறியல்

பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வாடகைக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு, உதகையில் மலைரயிலை மறிக்க முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நீலகிரி மலைரயில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த ரயிலை பாரம்பரிய சின்னம் என்று யுனெஸ்கோ சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக மலைரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் மலைரயில் போக்குவரத்து மீண்டும் துவங்குவது குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் வுN 43 என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மலை ரயிலை இயக்க அனுமதி வழங்கியுள்ளது.

தற்பொழுது வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் இயக்க திட்டமிட்டுள்ள தனியார் நிறுவனத்தினரால் கடந்த 5 மற்றும் 6ஆம் தேதி இரண்டு நாட்கள் மலை ரயில் போக்கு வரத்து இயக்கப்பட்டது, அதில் உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை செல்ல பயணக் கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.3000 வசூல் செய்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் எதிர்காலத்தில் இந்த கட்டணத்தை எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை உயர்த்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயில்வே நிர்வாகம் உதகை வரை பயணக் கட்டணமாக நூறு முதல் 500 வரை குறைவாக வசூலித்து வந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் கட்டணக் கொள்ளை அனைவரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் மலை ரயிலின் பாரம்பரிய சின்னத்தை மறைத்து வுN 43 என்று பெயர் பலகையுடன் கடந்த வாரம் இயக்கப்பட்டது. இன்று வந்த இந்த ரயிலில் பெயர் பலகை மட்டும் அகற்றப்பட்டு, அதே கட்டணத்தில் இயக்கப்பட்டது, இதையடுத்து மலை ரயிலை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கிய ரயில்வே நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து 160 சுற்றுலா பயணிகளுடன் இன்று உதகை வந்த மலை ரயிலை மறிக்க முயன்ற எஸ்டிபிஐ கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து, ரயில்வே நிர்வாகம் நேரடியாக மலை ரயிலை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த மலை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com