பரிசாக கிடைத்த பணத்தில் கழிவறை கட்டி கொடுத்த ஆசிரியர் - குவியும் பாராட்டுக்கள்

பரிசாக கிடைத்த பணத்தில் கழிவறை கட்டி கொடுத்த ஆசிரியர் - குவியும் பாராட்டுக்கள்
பரிசாக கிடைத்த பணத்தில் கழிவறை கட்டி கொடுத்த ஆசிரியர் - குவியும் பாராட்டுக்கள்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் அரசு மேலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இருந்தாலும்,  மாணவிகளுக்கான கழிவறையில் போதிய சுகாதாரம் இல்லை எனத் தெரிகிறது. இதனால் மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க அப்பகுதியில் இருக்கும் சக மாணவிகளின் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று வந்துள்ளனர். இதனால், இப்பள்ளியில் மாணவிகளின் சேர்க்கை குறைந்ததாக தெரிகிறது.

இந்த அவல நிலை குறித்து மாணவிகள், அப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் சதீஸ்குமாரிடம் புகார் கூறியுள்ளனர். ஏற்கெனவே இப் பள்ளிக்கு தேவையானவைகளை தனது சக ஃபேஸ்புக் நண்பர்கள் மூலம் சதீஸ்குமார் மூலம் நிவர்த்தி செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிகளின் கழிவறை கோரிக்கையினை அவர் நிறைவேற்ற முயற்சி செய்திருக்கிறார். அப்போதுதான் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஆசிரியர் சதீஸ்குமாரை சிறந்த ஆசிரியராக தேர்வு செய்து, அவருக்கு விருதும் ரூ. 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கினர்.

சிறந்த ஆசிரியராக தேர்வு செய்து தனக்கு வழங்கிய ரூ. 50 ஆயிரத்துடன் மேலும் தனது சொந்த பணம் ரூ. 82 ஆயிரத்தை சேர்த்து 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணத்தை பள்ளித் தலைமையாசிரியை பொசலியிடம் வழங்கி உள்ளார். கல்வித்துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதிப் பெற்று கடந்த ஜனவரி மாதம் கழிவறைக் கட்டுமானப் பணிகள் துவங்கினார் ஆசிரியர் சதீஸ்குமார். தனது நண்பர்கள் உதவியுடன் கழிவறைக்குத் தேவையான கட்டுமானப் பொருட்களை நன்கொடையாக பெற்று ரூ.10.50 லட்சம் மதிப்பிலான நவீன கழிவறையினை இவர் கட்டி முடித்துள்ளார்.

அதிநவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 13 கழிவறைகளில் மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு என ஒரு கழிவறை, ஆசிரியைகளுக்கு என 4 கழிவறைகள், மாணவிகளுக்கு 8 கழிவறைகள் உள்ளன. இந்தக் கழிவறையில் தானியங்கி நாப்கின் வழங்கும் கருவி, நாப்கின் எரியூட்டும் கருவி, வாஸ் பேசிங், கண்ணாடி ஆகியவை இடம் பெற்றுள்ளது.

இதற்கான திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியை பொசலி தலைமை வகித்தார். கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம், கோவை கங்கா மருத்துவமனை டாக்டர் பாலவெங்கட சுப்ரமணியன், திருச்சி பிஎஸ்ஆர் தொண்டு நிறுவன தலைவர் ஷேக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்று கட்டி முடிக்கப்பட்ட அதிநவீன சுகாதார வளாகத்தினை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

விழாவிற்கு வந்திருந்தோர் அரசுப் பள்ளி ஆசிரியர் சதீஸ்குமாரின் செயலை வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com