பஸ் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிட்டது - அரசு அறிவிப்பு 

பஸ் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிட்டது - அரசு அறிவிப்பு 
பஸ் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிட்டது - அரசு அறிவிப்பு 

சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்கப்பட்டு விட்டதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சென்னை மாநகரப் பேருந்து ஊழியர்கள் இன்று காலை முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் ஓடவில்லை. வழக்கமாக மாத இறுதி நாளில் ஊதியம் வழங்கப்பட்டு விடும் நிலையில் ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்றுவரை வழங்கப்படவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, பேருந்து பயணத்தை நம்பியிருக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். இதையடுத்து ஜூன் மாத ஊதியம் முழுவதும் இன்று மாலை 5 மணிக்குள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அரசு வாக்குறுதியளித்தது. 

அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்கப்பட்டு விட்டதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதாக போக்குவரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்து துறையில் 24 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத இறுதியில் ஊதியம் வழங்கப்படும். ஆனால் இவர்களுக்கு ஜூன் மாத சம்பளம் 62 சதவிகிதம் முதல்கட்டமாகவும் மீதமுள்ள சதவிகிதம் இரண்டாம் கட்டமாகவும் செலுத்தப்படும் எனவும் பனிமனை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு தரப்பில் நேற்று ஜூன் 30 விடுமுறை நாள் என்பதால் இன்று ஊதியம் வங்கியில் செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com