அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி என்பதே நோக்கம்: வெங்கய்ய நாயுடு

அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி என்பதே நோக்கம்: வெங்கய்ய நாயுடு

அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி என்பதே நோக்கம்: வெங்கய்ய நாயுடு
Published on

ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகத்தின் 30-ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது. அதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, உலக அளவில் மருத்துவத்துறை, மிகவும் தன்னலமற்ற துறையாக விளங்குகிறது என தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த வெங்கய்யா, அவர் இல்லாதது வருத்தமளிப்பதாகக் கூறினார். அதன்பின் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்த்துறையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக பெருமிதத்துடன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com