இடியாப்பம்| சைக்கிளில் இடியாப்பம் விற்போர் உரிமம் பெற வேண்டும்.. திடீர் உத்தரவு!
தமிழகத்தில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்களும் இனி உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் சைக்கிளிலும், தலை சுமையாகவும் பலர் இடியாப்பம், புட்டு ஆகியவற்றை விற்பனை செய்கின்றனர். சில பகுதிகளில் விற்கப்படும் இடியாப்பம் தரம் குறைவாக இருந்ததாக உணவுப்பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்ததாகத் தெரிகிறது.
எனவே, இனி இடியாப்பம் விற்பவர்கள் ஆன்லைன் வாயிலாக இலவசமாக உணவு பாதுகாப்புத் துறை உரிமத்தை பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும்என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

