ரூ.2000 நிவாரணத் தொகை, 14 பொருட்களை ஜூன் 25க்குள் வழங்குக - தமிழக அரசு உத்தரவு

ரூ.2000 நிவாரணத் தொகை, 14 பொருட்களை ஜூன் 25க்குள் வழங்குக - தமிழக அரசு உத்தரவு
ரூ.2000 நிவாரணத் தொகை, 14 பொருட்களை ஜூன் 25க்குள் வழங்குக - தமிழக அரசு உத்தரவு

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண இரண்டாம் தவணை ரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்களை வரும் 25க்குள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதன்படி ஆட்சி அமைத்த முதல்நாளிலேயே முதல்வர் ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி உட்பட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். மேலும் நிவாரண நிதியானது இரண்டு தவணைகளாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபடியே, முதல் தவணையானது மே மாதத்தில் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு இரண்டாவது தவணை ரூ.2000 உடன் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 14 அத்தியாவசியப் பொருட்களும் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 

ரூ. 2000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள் விநியோகம் கடந்த 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் பொருட்கள் மற்றும் பணத்தை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் வருகிற 25ஆம் தேதிக்குள் அவற்றை கொடுத்துமுடிக்க தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com