தமிழ்நாடு
நர்சரி பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அரசாணை: பாண்டியராஜன்
நர்சரி பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அரசாணை: பாண்டியராஜன்
அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் நர்சரி பள்ளிகளை முறைப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
கோவையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனை அடுத்து கோவையில் புதிதாக அமைக்கப்படவுள்ள உள்விளையாட்டு மைதானத்திற்கான இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் பாண்டியராஜன், கோவை மத்திய சிறை அருகே 5 ஏக்கரில், 3 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச அளவிளான உள் விளையாட்டு அரங்கம் அமைய உள்ளதாக தெரிவித்தார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் விடுதிகளும் சகல வசதிகளுடன் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த பணிகள் அனைத்தும் அடுத்த 6 மாததிற்குள் முடிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.