பள்ளி கட்டடத்தில் அரசு அலுவலகங்கள் இயங்குவதால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் அவலம்!

கள்ளக்குறிச்சி அருகே ரூ.6 கோடி மதிப்பில் துவங்கப்பட்ட கூடுதல் பள்ளி கட்டிடம், மாவட்ட அலுவலகமாக செயல்படுவதால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
govt school students
govt school studentspt desk

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயப்பாளையம், காரனூர், ஏமப்பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், ஆண்டு தோறும் மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பதால் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.6 கோடி மதிப்பீட்டில் 14 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டது.

school students
school studentspt desk

இந்நிலையில், அதே ஆண்டு கள்ளக்குறிச்சி, தமிழகத்தின் 33 வது மாவட்டமாக உருவானதைத் தொடர்ந்து கூடுதல் வகுப்புகள் கட்டப்பட்ட கட்டடம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூடுதல் கட்டடமாக செயல்பட தொடங்கியது. இதனால் பழைய கட்டடத்திலேயே சிரமப்பட்டு வகுப்புகள் நடந்தன. தற்போது 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில கூடிய சூழ்நிலையில் 10-க்கும் மேற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயிலும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மழை மற்றும் வெயில் காலங்களில் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் மனதளவிலும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். மேலும், 2000 மாணவர்கள் பயிலக் கூடிய இப்பள்ளியில் 1 கழிவறை மட்டுமே உள்ளது. அந்த கழிவறையும் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

students
studentspt desk

மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு கூடுதலாக இயங்கக் கூடிய மாவட்ட அலுவலகத்தின் பல்வேறு துறைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து புதிய வகுப்புகளில் மாணவர்கள் பயில தமிழக பள்ளிக்கல்வித் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com