பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை தொடரும் - தமிழக அரசு

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை தொடரும் - தமிழக அரசு

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை தொடரும் - தமிழக அரசு
Published on

பொதுமக்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேணடும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பாட்டுள்ள அறிக்கையில், “வரும் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலை அமைப்பதையும் பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும் தடை செய்யப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றமும் அரசின் ஆணையை பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com