'சிவப்பு நிற அரிசியை மக்கள் வாங்க விரும்பவில்லை' - அரசு எடுத்த முக்கிய முடிவு

'சிவப்பு நிற அரிசியை மக்கள் வாங்க விரும்பவில்லை' - அரசு எடுத்த முக்கிய முடிவு
'சிவப்பு நிற அரிசியை மக்கள் வாங்க விரும்பவில்லை' - அரசு எடுத்த முக்கிய முடிவு

நேரடி கொள்முதல் நிலையங்களில் டிகேஎம் 9 ரக நெல் கொள்முதலை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் டிகேஎம் 9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வகை நெல்லினை அரவை செய்து பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்திலும், சற்று பருமனாகவும் இருப்பதால், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இந்த அரிசியை மக்கள் வாங்க விரும்புவதில்லை என அரசு தெரிவித்துள்ளது. அதனால், மக்கள் விரும்பாத அரிசியை பொதுவிநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதை தவிர்க்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 -23 பருவத்திலிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் டிகேஎம்9 ரக நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதைக் கைவிட அரசு ஆணையிட்டுள்ளது. சந்தையில் புழக்கத்தில் இருக்கும் சன்ன ரக நெல் வகைகளை சாகுபடி செய்து பயன்பெறுமாறு விவசாயிகளை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com